மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

அசாமில் 19 லட்சம் பேர் வாழ்வு கேள்விக்குறி!

அசாமில் 19 லட்சம் பேர் வாழ்வு கேள்விக்குறி!

அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் தேசிய மக்கள் பதிவேடு அல்லது என்.ஆர்.சியின் இறுதிப் பட்டியல், அசாம் மாநில அரசின் இணையதளத்தில் இன்று (ஆகஸ்ட் 31) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கான சிறப்பு அதிகாரி ப்ரதீக் ஹஜேலா, "தேசிய குடியுரிமை பதிவேட்டின் வரைவு பட்டியல்களில் இடம்பெறாமல், தக்க சான்றுகளோடு மேல்முறையீடு செய்தவர்கள் மற்றும் ஏனையவர்களையும் சேர்த்து 3,11,21,004 பேரின் குடியுரிமை உறுதிசெய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை தங்களது குடியுரிமையை நிரூபிக்காத அல்லது நிரூபிக்க முயன்று நிராகரிக்கப்பட்ட 19,06,657 பேரின் பெயர்கள் இந்த இறுதிப் பட்டியலில் இணைக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 40லட்சம் பேரின் பெயர்கள் விடுப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள இறுதிப் பட்டியலில் 19லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் விடுபட்டுள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வங்க மொழி பேசும் முஸ்லீம் மக்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களது குடியுரிமையை தீர்ப்பாயத்தில் நிரூபிப்பதற்கான காலக்கெடு 60 நாட்களிலிருந்து 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தீர்ப்பாயங்களின் முடிவும் திருப்தியளிக்காத பட்சத்தில், ஒருவர் தனது குடியுரிமையை நிரூபிக்க உயர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அணுக முடியும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அப்போதும் இப்பட்டியலில் விடுபட்டுள்ள நபர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்காத பட்சத்தில், அவர்கள் வெளிநாட்டவர்களாக அறியப்படுவார்கள்.

இது வங்கத்திலிருந்து அசாம் மாநிலத்திற்கு பிரிவினையின் போது வந்த மக்களை பாதுகாப்பற்ற நிலைக்கு அழைத்துச் செல்லும் முடிவாக பார்க்கப்படுகிறது. ஆவணங்களில் சிறிய எழுத்துப் பிழைகள் இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உடன் பிறந்தவர்களில் சிலருடைய பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

அசாம் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் புவியியல் கொண்ட நிலப்பரப்பாகும். அதனால் பெரும்பாலான மக்கள் தங்களுடைய உடமைகளை வெள்ளத்தில் இழந்த போது ஆவணங்களையும் இழந்துள்ளனர். ஆவணங்களை பராமரித்து வைக்காதது, கல்வி அறிவு இல்லாதது அல்லது சட்டபூர்வ உரிமை கோருவதற்கு பண வசதி இல்லாதது போன்ற காரணங்களால் பல குடும்பத்தினரால் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.

1971 மார்ச் 24 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்துவிட்டதாக நிரூபித்தவர்களின் பெயர்கள் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளன.

நிலம் மற்றும் குத்தகை ஆவணங்கள், வாக்காளர் அடையாள அட்டைகள் அல்லது பாஸ்போர்ட்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, குடிமக்கள் அந்தஸ்துக்கு அவர்கள் உரிமை கோர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

1971க்குப் பிறகு பிறந்தவர்கள், தங்களுடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி ஆகியோர் மேற்படி தேதிக்கு முன்னதாகவே இந்தியாவில் குடியேறியவர்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கை சீற்றங்களால், கல்வி அறிவு இல்லாமையால் ஆவணங்களை இழந்த/இல்லாத பலர், 1000 கி.மீட்டர்களை கடந்து கொல்கத்தா நகரத்தில் உள்ள பழைய காப்பகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள 1952 முதல் 1971 வரையிலான வாக்காளர் பட்டியலில் முந்தைய தலைமுறையினரின் பெயர்களைத் தேடி வருவதாக நேற்றைய செய்திகள் தெரிவித்து வந்துள்ளன. இது அம்மக்களுக்கு பெரும் நெருக்கடியையும், அலைக்கழிப்பையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

லட்சக்கணக்கான மக்கள் இறுதிப் பட்டியலில் இடம் பெறா நிலையில், அசாம் மாநிலத்தில் வன்முறை வெடிக்கலாம் எனக் கருதப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம், “அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளிநாட்டினராக அறிவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் தீர்ப்பாயத்தில் முறையிட வாய்ப்பு வழங்கப்படும். வெளிநாட்டினர் என அறிவித்து யாரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட மாட்டார்கள். எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்” எனக் கூறியுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019