மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது: பிரியங்கா சாடல்!

பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது: பிரியங்கா சாடல்!

ஜிடிபி சதவிகிதம் சரிந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

2019-20 ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் கணக்கு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டில் 5.8% என்ற அளவில் இருந்து ஜிடிபி 5 சதவிகிதமாக சரிவைச் சந்தித்துள்ளது. ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பிறகு அளவு ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாகவே ஜிடிபி சதவிகிதம் குறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நல்ல காலம் பிறக்கும் என்று பாஜக அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த நிலையில், பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது என்பதை ஜிடிபி புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. ஜிடிபியும் வளர்ச்சி அடையவில்லை. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வலிமையாகவில்லை. வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்ல யார் பொறுப்பேற்பது என்பதை தெளிவுபடுத்துங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எக்கனாமிஸ் ஸ்லோடவுன் மற்றும் எக்கனாமிஸ் க்ரைசிஸ் என்ற ஹாஷ் டேக்குகளை பயன்படுத்தி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜிடிபி 5%ஆக குறைந்துள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதை தெளிவுபடுத்தியுள்ளது பாஜக அரசு பெருமைபேசி மார்தட்டிக்கொள்வதை நிறுத்தி விட்டு தற்போதாவது விழித்துக்கொண்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019