மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

காஷ்மீரில் போராட்டங்கள்: போலீஸ் ரகசிய அறிக்கை!

காஷ்மீரில் போராட்டங்கள்: போலீஸ் ரகசிய அறிக்கை!

ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துகொண்டிருப்பதாக, அம்மாநில போலீசாரின் ரகசிய அறிக்கை தெரிவிக்கிறது.

ஆகஸ்டு 5 ஆம் தேதி காஷ்மீருக்கான 370 ஆவது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து இன்று வரை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த வாரம் உத்தரவிடப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், அங்கே கள நிலவரம் என்ன என்பதை ஜம்மு காஷ்மீர் போலீசின் ரகசிய அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகம்.

ஜம்மு காஷ்மீர் போலீஸார் தங்கள் மேலிடத்துக்கு அனுப்பிய அறிக்கையை ஸ்மெல் செய்து இந்த விவரங்களைப் பெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

அதன்படி, ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஜம்மு, காஷ்மீரில் பத்து மாவட்டங்களில் 280 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களை போலீஸ் தன் பாஷையில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் சம்பவங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்த வகையில், ஸ்ரீகரில் மட்டும் 160க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்திருக்கின்றன. புல்வாமாவில் 22 போராட்டங்களும், பாராமுல்லவில் 18 போராட்டங்களும் நடந்திருப்பதாக போலீஸ் அறிக்கை கூறுகிறது. ஆகஸ்டு 17 ஆம் தேதியன்று மட்டும் 24 இடங்களில் போராட்டங்கள் நடந்திருக்கிறது. ஒரே நாளில் அதிக இடங்களில் போராட்டம் நடந்தது அன்றைக்குதான் என்றும், ஜம்மு காஷ்மீர் போலீசின் , ‘இன்டர்னல் ரிப்போர்ட்’ கூறுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தப் போராட்டங்களில் 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறுசிறு காயம் அடைந்திருப்பதாகவும், அவர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அந்த போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மூன்று வாரங்களில் மேற்குறிப்பிட்ட போராட்டங்களால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் ஜம்மு காஷ்மீர் போலீசாரின் உள் விவகார அறிக்கை தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமயிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீரின் நிலைமையை பார்வையிடுவதற்காக சென்றபோது அவர்கள் ஸ்ரீகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குத் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத் தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019