மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக் கூடாது: சென்னை பல்கலை!

பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக் கூடாது: சென்னை பல்கலை!

மாணவ மாணவியரை, பேராசிரியர்கள் தங்களது வீடுகளுக்கு அழைக்கக் கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் நேற்று (ஆகஸ்ட் 30) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பல்கலை வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள், மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைக்கத் தடை விதித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளதாகச் சமீபகாலமாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் அளித்திருந்தனர். இவ்வாறான சூழ்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் தனது வளாகத்தில் பணிபுரியும், பேராசிரியர்கள் விரிவுரையாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசன் அனுப்பிய சுற்றறிக்கையில், ”பல்கலை வளாகத்தை பாலியல் துன்புறுத்தல் இல்லாத இடமாக மாற்றும் முயற்சி இது. பாலியல் தொந்தரவு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் புகார்களை விசாரிக்கப் பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பாலியல் புகார்களை விசாரணைக் குழு, பதிவாளர், துணை வேந்தர் ஆகியோரிடம் மாணவிகளும் பேராசிரியைகளும் தெரிவிக்கலாம். புகார் வந்தால் உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களைப் பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ அழைக்கக் கூடாது. ஒருவேளை ஆசிரியர்களின் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், பல்கலைக்கழகத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019