மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

தப்ஸியின் இந்திப் படத்தில் தமிழ் இயக்குநர்!

தப்ஸியின் இந்திப் படத்தில் தமிழ் இயக்குநர்!

தப்ஸி நடித்து வரும் ரஷ்மி ராக்கெட் என்ற பாலிவுட் படத்தின் கதையை தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் தப்ஸி சமீபத்தில் சாந்த் கி ஆங்க், மிஷன் மங்கள் படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி மிஷன் மங்கள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து சாந்த் கி ஆங்க் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கேம் ஓவர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தப்ஸி நடித்து வரும் புதிய இந்தி படம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது. ரஷ்மி ராக்கெட் என்னும் இப்படம் குஜராத்தை சேர்ந்த தடகள வீராங்கனையின் கதையாகும். ரோனி ஸ்கூரூவாலா தயாரிக்கும் இப்படத்தை ஆகர்ஷ் குரானா இயக்கி வருகிறார். சாந்த் கி ஆங்க் படத்தை தொடர்ந்து தப்ஸி நடிக்கும் அடுத்த ஸ்போர்ட்ஸ்-பயோபிக் டிராமா இதுவாகும்.

இப்படத்திற்கு கதை எழுதியவர் ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி படங்களை இயக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமி. இந்தி படத்திற்கு அவர் எழுதிய முதல் கதை இதுவாகும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019