மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

அபிநந்தனுக்கு மற்றொரு கவுரவம்!

அபிநந்தனுக்கு மற்றொரு கவுரவம்!

உத்தரப் பிரதேசத்தில் முக்கிய சாலை சந்திப்புக்கு இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் போது, இந்திய விமானங்களைத் துரத்தி வந்த பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் தனது மிக் பைசன் ரக விமானத்தைக் கொண்டு சுட்டு வீழ்த்தினார். அபிநந்தனின் வீரதீர செயலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. அவருக்கு உயரிய விருதான வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது, இந்தநிலையில் அவரை மேலும் கவுரவிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள டெலாபிர் சாலைக்கு அபிநந்தன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. திருசூல் விமானப் படைத் தளத்துக்கு அருகில் இருக்கும் இந்த சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலை சந்திப்புக்கு அபிநந்தன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று இந்த மாத தொடக்கத்தில் பாஜக கவுன்சிலர் விகாஸ் சர்மா கோரிக்கை விடுத்திருந்தார். இவரைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க கூட்டுறவு அமைப்பும், பரேலி மாநகராட்சிக்குக் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து டெலாபிர் சாலைக்கு அபிநந்தன் பெயரை வைக்க பரேலி மாநகராட்சி நேற்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சியின் துணை தலைவர் அதுல் கபூர் கூறுகையில், இனி டெலாபிர் சந்திப்பு அபிநந்தன் சவுக் பெயரில் அழைக்கப்படும். இந்திய விமானப்படையின் துணிச்சலான அதிகாரியின் பெயரில் முக்கிய இடத்திற்கு நாங்கள் முதலில் பெயரிட்டது பரேலியின் குடிமக்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அதேபோல சவுகி சவுரகா என்ற பகுதிக்கு அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரை சூட்டியுள்ளதாக பரேலி மாநகராட்சி தெரிவித்துள்ளது. விங் கமாண்டர் அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019