மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வசதிகள் செய்து தரப்படாதது ஏன்?

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வசதிகள் செய்து தரப்படாதது ஏன்?

நீதிமன்றம் உத்தரவிட்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி குழுவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது ஏன் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியாற்றி வருகிறார். இவருக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு எந்தவித வசதிகளையும் ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாகப் பதிலளிக்கக் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்காகக் கும்பகோணம் நீதிமன்றத்துக்குச் செல்லும் அதிகாரிகளுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று பொன்.மாணிக்கவேல் நேரில் ஆஜராகி தெரிவித்தார். மேலும், ”சிலை கடத்தல் வழக்குகளின் முதற்கட்ட விசாரணையைச் சிறப்பு அதிகாரியின் குழு நடத்தக் கூடாது என்றும், அவர்களுக்கு வழக்கின் ஆவணங்களைக் கொடுத்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என ஆய்வாளர்களை ஏடிஜிபி ஒருவர் மிரட்டுவதாகவும்” அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மகாதேவன், ஆதிகேசவலு, அரசு தரப்பில் அவகாசம் கோரியதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் அரசு தவறாக நடந்து கொள்வதாகவும், சிறப்புக் குழுவுக்கு ஏன் வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் அரசுக்குக் கேள்வி எழுப்பினர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துப்புரவுப் பணியாளர்களுக்குக் கூட அரசால் ஊதியம் வழங்க முடியாதா என்றும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு விசாரணையை ஏடிஜிபி எப்படி தடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இந்தநிலையில், தமிழக அரசுத் தரப்பில் பதில் அளிக்கச் செப்டம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் கோரப்பட்டதால் அன்றைய தினத்துக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019