மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

தமிழ்நாடுதான் நம்பர் ஒன்- இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் எடப்பாடி

தமிழ்நாடுதான் நம்பர் ஒன்- இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் எடப்பாடி

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கூட்ட அரங்கில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அந்நாட்டு முன்னாள் அமைச்சர்கள், மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஒருவர் உரையாற்றியது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணம் புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கிறார். நேற்று (ஆகஸ்டு 30) இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுகாதார அம்சங்களில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்றுள்ளது. புதிய முக்கிய திட்டங்களை அறிமுகம் செய்தல், தரமான கொள்கைகளை புகுத்துதல், கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவை தமிழகத்தில் சுகாதாரம் மேம்பட முக்கிய பங்காற்றுகின்றன. ஐ.நா. சபை நிர்ணயித்திருந்த மேம்பாட்டு நோக்கங்களை தமிழ்நாடு ஏற்கனவே செய்து காட்டியிருக்கிறது. சுகாதாரப்பிரிவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மேம்பாட்டு நோக்கங்களை 2030-ம் ஆண்டுக்குள் அடைவதற்காக தமிழக அரசு தன்னை தயார்படுத்தி உள்ளது.

தமிழகத்தை அடுத்த அளவில் முன்னேற்றம் அடையச் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். பொருளாதார உள்கட்டமைப்புகளில் அரசு அங்கீகரித்துள்ள மாற்று முதலீட்டு நிதி, உலக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாக அமைகிறது. பசுமை எரிசக்தி, நீர், நகர்ப்புற உள்கட்டமைப்பு, வீட்டு வசதி ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற எண்ணுகிறோம்” என்று பேசினார்.

தங்களின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து வந்ததற்காக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொண்டார்கள்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019