மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்

“நீங்க  ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்

அமமுகவில் இருந்து கடந்த ஜூன் 28-ஆம் தேதி திமுகவில் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு நேற்று (ஆகஸ்ட் 30) திமுக வின் மாநில அளவிலான பதவியான கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ஜூன் 28-ஆம் தேதி திமுகவில் சேர்ந்த தங்கதமிழ்செல்வன் ஜூலை 21 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு ஸ்டாலினை வரவழைத்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தி தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைத்தார்.

இதையடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஸ்டாலினை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்டத்தில் தன்னால், திமுகவில் சேர்க்கப்பட்ட 27 ஆயிரத்து 200 பேரின் உறுப்பினர் படிவங்களையும் உறுப்பினர் கட்டணத் தொகையையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.

இந்த சந்திப்பு நடந்த 15 நாட்களுக்குள் தங்கதமிழ்செல்வன் கொள்கை பரப்புச் செயலாளராக அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் என்ற தகவல் கிடைத்ததும் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது தீவிர ஆதரவாளர்கள் சற்று சுணங்கி தான் போனார்கள். காரணம் திமுகவின் தேனி மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுவார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தங்க தமிழ்செல்வன் கூட அப்படித்தான் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார். காரணம் தங்க தமிழ்செல்வனுக்கு முன்னதாக திமுகவுக்கு சென்ற கரூர் செந்தில்பாலாஜிக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுத்த நிலையில், தங்கத்துக்கும் அதேபோல்தான் கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்தனர் பலரும். இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொபசெ என்று அறிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

தேனியில் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

“வீரபாண்டியில் ஸ்டாலினை அழைத்து மிகப் பெரிய கூட்டம் நடத்தி முடித்ததும் தங்கத்துக்கு மாவட்டப் பொறுப்பு என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி போன தங்கம், தேனி மாவட்ட திமுகவில் தன் கூட இணைந்த 27 ஆயிரத்து 200 பேருக்கான உறுப்பினர் படிவங்களையும், மெம்பர்ஷிப் கட்டணத்தையும் ஸ்டாலின் கிட்ட கொடுத்தார். அப்பவே தங்கத்தை பாராட்டிய ஸ்டாலின், சில நாட்கள் கழித்து தங்கத்தைக் கூப்பிட்டார்.

சுமார் இரண்டு மணி நேரம் தங்கத்தோடு பேசிக்கொண்டிருந்தார் ஸ்டாலின். ஜெயலலிதா, தினகரன், ஓ.பன்னீர், எடப்பாடி பழனிசாமி என்று பலரைப் பற்றியும் பேச்சு போயிருக்கிறது. அனைவரது ப்ளஸ் மைனஸ்களை பற்றியும் விலாவாரியாக தனது பாணியில் பேசியிருக்கிறார் தங்கம்.

‘தேனியில ரொம்ப நல்லா பண்ணிக்கிட்டிருக்கீங்க. உங்களுக்கு என்ன பதவி வேணும், கேளுங்க’ என்று ஸ்டாலின் நேருக்கு நேர் தங்கத்திடம் கேட்டிருக்கிறார். ’தளபதி நீங்க எது கொடுத்தாலும் ஏத்துகிர்றேன்’ என்று தங்கம் சொல்லியிருக்கிறார்.

’தேனி மாவட்டப் பொறுப்பு கொடுத்து உங்களை ஒரு மாவட்டத்துக்குள்ள்யே வைக்கறது நல்லா இருக்காதுனு நினைக்கிறேன். நீங்க ஏற்கனவே ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க. அதனால கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். இப்ப என்கிட்ட சொன்னீங்க பாருங்க... அதேபோல தமிழ்நாடு முழுசும் போயி எல்லாரையும் கிழிகிழினு கிழிக்கணும். அதுக்குதான் இந்தப் பதவி. தமிழ்நாடு ஃபுல்லா சுத்தி வாங்க. உங்க கிராமத்து பாணி பேச்சு எல்லாருக்கும் பிடிக்கும்’ என்று ஸ்டாலின் சொல்ல, ஒரு கணம் திகைத்து ஸ்டாலினை வணங்கிவிட்டார் தங்கம்” என்றவர்கள் தொடர்ந்து நம்மிடம்,

“தங்கத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுப்பார்கள் என்று பேச்சு வந்தது. ஆனால் தங்கத்துக்கு மிகப்பெரிய கௌரவம் செய்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால் இந்த கௌரவம் மாவட்ட அரசியல், அடுத்தடுத்த பதவி நோக்கிய பயணத்துக்கு உதவுமா என்று கேட்கும், தனது ஆதரவாளர்களுக்கு சொல்லிப்புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்” என்று முடித்தனர்.

-ஆரா


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019