மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் போராட்டம்!

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் போராட்டம்!

பொதுத் துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலையை சமாளிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் முதலீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 30) டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தவர், முக்கிய பொதுத் துறை வங்கிகளை இணைக்கப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைட்டட் வங்கி ஆகியவை இணைக்கப்படுகின்றன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. அதுபோலவே இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன்மூலம் பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைகிறது. ஆனால் இந்த அறிவிப்பு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவில் யாருக்கும் மெகா வங்கிகளோ அல்லது மெகா இணைப்புகளோ வேண்டாம். பரந்துவிரிந்த இந்தியாவில் லட்சக்கணக்கான கிராமங்களில் வங்கிசேவைகள் இல்லை. எனவே, வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (இன்று) நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம். இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடுவோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும், ஊழியர்கள் தாங்கள் பணி செய்யும் வங்கிகள் முன்பாக கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019