மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜூலை 2019

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

உலகக் கோப்பையை மூன்றாவது முறையாகக் கையிலேந்தும் இந்திய அணியின் ஆசை நிராசையாகிவிட்டது. அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராகக் கடுமையாகப் போராடிய இந்திய அணி இறுதியில் தோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. இறுதிப் போட்டியில் தோற்றதுபோல இத்தோல்வி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்தும் ஜடேஜா மற்றும் தோனி ஆகிய இருவரும் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. இதுதான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணமா?

5 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட் விழுந்தபோதே இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கும் என்பதே கேள்வியாக இருந்தது. ஜடேஜா மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டம்தான் இந்திய அணியை கௌரவமான ஸ்கோரை நோக்கிக் கொண்டு சென்றது. முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்டாலே இந்தியாவை வென்றுவிடலாம் என்று எதிரணியினருக்கே நன்றாகத் தெரிந்திருக்கும். எனவே இந்திய அணியின் வெற்றி தோல்வியானது இந்தியாவின் முதல் மூன்று வீரர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே அமைகிறது.

இந்திய அணியின் பெரும்பாலான வெற்றிகளில் முதல் மூன்று பேரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் (லோகேஷ் ராகுல்) மற்றும் விராட் கோலி ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இந்திய அணியால் ரன் குவிக்கவோ, வெற்றி பெறவோ முடிகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். இந்தப் பிரச்சினையை இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய அணி வீரர்களும், பயற்சியாளரும் கலந்தாலோசித்து சரியான தீர்வு காணாவிட்டால் இந்திய அணியின் எதிர்காலத்துக்குப் பெரும் சரிவு ஏற்படும்.

முன்பு சச்சின், சேவாக், கம்பீர் ஆகிய முதல் மூன்று விக்கெட்கள் விரைவில் வீழ்ந்தாலும் பின்வரிசையில் வரும் கங்குலி, டிராவிட், யுவராஜ் போன்ற வீரர்கள் நிறைய போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். ஆனால், இப்போது அதுபோன்ற தரமான வீரர்கள் இந்திய அணியில் இல்லை. இருக்கும் வீரர்கள் சரியான நேரத்தில் கைகொடுக்கத் தவறுகின்றனர். முகமது கைப், சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களும் பின்வரிசையில் வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். ஆனால், இப்போது இந்திய அணி முதல் மூன்று பேரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

நேற்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டார். வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டதோடு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் முன்வைத்த விமர்சனங்களையும் தாண்டி ஜடேஜா சிறப்பாக விளையாடித் தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

வியாழன் 11 ஜூலை 2019