உலகக் கோப்பை: பாகிஸ்தானைப் பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!


உலகக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் நேற்று (மே 31) பாகிஸ்தானை எதிர்த்து மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 105 ரன்களில் சுருண்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் ஒசேன் தாமஸ் 4 விக்கெட்டுகளும், கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 13.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 108 ரன்கள் எடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆறுதல் அளித்தார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைப் பதம்பார்த்த ஒசேன் தாமஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சு 1980களில் இருந்த அணியின் பந்துவீச்சைப் போல மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.
இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, கத்துக்குட்டி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. பிரிஸ்டோல் கவுண்டி மைதானத்தில் மாலை 6 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.
.
.
மேலும் படிக்க
.
.
.
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!
.
ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!
.
மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!
.
டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?
.
மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!
.
.