மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

கமலுக்கு முன் ஜாமீன்!

கமலுக்கு முன் ஜாமீன்!

இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரவக்குறிச்சியில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று கூறினார். தேர்தல் சமயத்தில் கமலின் இந்த பேச்சு இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடியும் பதில் அளித்திருந்தார். ஆனால் நான் கூறியது சரித்திர உண்மை என்று தெரிவித்த கமல் என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் எனவும் கூறியிருந்தார்,

இதற்கிடையே இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, இதைத்தொடர்ந்து கமல் சார்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை மே 20ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

அதன்படி, இன்று (ஜூன் 1) கமல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி விஜய் கார்த்தி உத்தரவிட்டார். கமலின் வருகையை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019