எனது அந்தரங்கத்தில் ஊடுருவ வேண்டாம்: அனுராக்


பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், பத்திரிக்கையாளர்கள் தனது அந்தரங்கத்தில் ஊடுருவ வேண்டாம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
தேவ் டி, குலால், கேங்ஸ் ஆஃப் வஸிப்பூர்(1,2) போன்ற இந்தி படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப் தனது மனதில் பட்ட கருத்துக்களை எந்த தயக்கமுமின்றி வெளிப்படையாகக் கூறுபவர். அதனாலேயே அவரது பெயர் செய்திகளில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கும்.
சென்ற மாத தொடக்கத்தில் மும்பையில் உள்ள தனியார் கிளினிக்குக்கு வந்த அனுராக்கை புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து ‘உங்களுக்கு வேறு வேலையே இல்லையா’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது அது இந்தி மீடியாக்களில் சர்ச்சையானது.
இந்த நிலையில் டாப்சியின் கேம் ஓவர் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனுராக் காஷ்யப் இதுகுறித்து பேசியபோது, 'பத்திரிகையில் பணிபுரியும் புகைப்பட கலைஞர்கள் வேறொருவரின் தனிப்பட்ட இடங்களில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நான் தனிப்பட்ட வேலையை செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் என்னை புகைப்படம் எடுத்தால் எனது அந்தரங்கத்தில் ஊடுருவதாகத்தான் அர்த்தம். இந்த மாதிரியான நேரங்களில் நான் செல்பி கூட எடுக்க அனுமதிப்பதில்லை’ என்றார்.
மேலும் பத்திரிக்கையாளர்கள் அனுராக்கிடம், அவ்வாறு பேசியதை சரி என நினைக்கிறீர்களா என கேட்டதற்கு, ‘எனக்கு சரியென்று தோன்றியதால் இதனை நான் கூறுகிறேன்' என்று கூறினார்.
புகைப்பட கலைஞர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இந்த விழாவில் அனுராக் காஷ்யப்பை மட்டும் தனியாக புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
.
மேலும் படிக்க
.
.
.
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!
.
ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!
.
.
டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?
.
தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!
.
.