மவுனம் கலைத்த ராகுல்


பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற 52 எம்.பிக்கள் போதும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டார் ராகுல் காந்தி. ரஃபேல் ஊழல், வேலைவாய்ப்பின்மை, நிறைவேற்றப்படாத மோடியின் வாக்குறுதிகள் என பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்த சூழலில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகத் தீர்மானமாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் தற்போது மீண்டும் பாஜகவுக்கு எதிராக களமிறங்கவுள்ளார்.
இன்று (ஜூன் 1) டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பேசிய சோனியா, ”ராகுல் தலைமையில் காங்கிரஸ் சுறுசுறுப்பாக இயங்கும்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பாஜகவை (303 எம்.பி.க்கள்) எதிர்க்க காங்கிரஸின் 52 எம்.பி.க்கள் போதும் என்று உறுதியளிக்கிறேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் நாட்டின் ஜனநாயகத்துக்காகப் போராடுகிறோம் என்பதை ஒவ்வொரு காங்கிரசாரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பாஜக நம் மீது பகை மற்றும் வெறுப்பு அரசியலை முன்வைக்கும். அதைக் கடுமையாகவும், முழுமையாகவும் எதிர்க்கத் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பாஜகவை எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அந்தஸ்து
இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ”நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 54 பேர் (10 சதவிகிதம்) இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த எண்ணிக்கையில் இருந்து 2 குறைவாக உள்ளது. 52 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். எனவே முறைப்படி எதிர்க்கட்சி அந்தஸ்து தேவையா, வேண்டாமா என்பதைஆளும்கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கோரப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
.
.
மேலும் படிக்க
.
.
.
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!
.
ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!
.
.
டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?
.
தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!
.
.