ஆவின் பால் விலை உயர்வு?


முதல்வரிடம் பேசி பால் கொள்முதல் விலையை உயர்த்தப் போவதாகத் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பொதுமக்களைப் பாதிக்காதவாறு விற்பனை விலையை உயர்த்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
உலக பால் தினம் இன்று (ஜூன் 1) கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார் தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தனியார் பால் விலை உயர்வதைத் தொடர்ந்து ஆவின் பால் விலையும் விரைவில் உயர வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
“தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையைக் காரணம் காட்டி விற்பனை விலை உயர்த்தப்படுவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மாட்டுத் தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதே இதற்குக் காரணம். தமிழக அரசும் ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தத் திட்டமிட்டிருந்தது” என்று அவர் பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழகப் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்துப் பேசவிருப்பதாகவும், பொதுமக்களைப் பாதிக்காத வகையில் விற்பனை விலை உயர்த்தப்படும் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், தனியார் பால் விற்பனை விலை உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பால் முகவர்களுக்கான வருமானத்தைச் சதவிகித அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழலியே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜி பேசியபோது, தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் வெற்றி கிடைத்தது பற்றியும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி ஆளக் கூடாது என்று தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை எனவும், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி குடும்பத்தினர் நாட்டை ஆள வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர் எனவும் தெரிவித்தார். பிரச்சினை ஏதேனும் வந்தால், அதிமுகவில் உள்ள எல்லோரும் ஒன்றுபடுவோம் என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
.
.
மேலும் படிக்க
.
.
.
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!
.
ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!
.
.
டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?
.
தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!
.
.