மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

மீரா: பறிபோகும் மிஸ் சவுத் இந்தியா பட்டம்!

மீரா: பறிபோகும் மிஸ் சவுத் இந்தியா பட்டம்!

நடிகை மீரா மிதுனிடமிருந்து மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். திரைத்துறையில் நுழைவதற்கு முன்பாகவே பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். தற்போது நடிப்புடன் சேர்த்து அழகிப் போட்டிகளை ஒருங்கிணைத்து வருகிறார் மீரா மிதுன்.

‘மிஸ் தமிழ்நாடு டிவா 2019’ என்ற அழகிப் போட்டியை வடபழனியில் ஜூன் 3 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அழகிப் போட்டியை நடத்தக்கூடாது என்று அவரை அஜித் ரவி என்பவர் மிரட்டுவதாக அவர் மே 30ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் உள்ள இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

தொழில் போட்டி காரணமாக ஜோ மைக்கேல் பிரவீன் மூலமாக அஜித் ரவி கொலை மிரட்டல் விடுப்பதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை தவறுதலாக பயன்படுத்துவதாகக் கூறி மீரா மிதுனிடம் இருந்து பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா நிறுவனம் இன்று (ஜூன் 1) அறிவித்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019