மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

மத்திய அமைச்சர் சர்ச்சை: பன்னீர் மகன் பதில்!

மத்திய அமைச்சர் சர்ச்சை: பன்னீர் மகன் பதில்!

இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் கூட தமிழகத்தில், அக்கூட்டணி தேனி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அங்கு பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 30ஆம் தேதி பதவியேற்ற நிலையில், ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அன்றைய தினம் தமிழகத்திலிருந்து யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி தெரிவித்த எதிர்ப்பின் காரணமாகவே ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று தகவல் வெளியானது. எடப்பாடி எதிர்ப்பு தொடர்பாக நாம் 30ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் மத்திய அமைச்சர்: ஓபிஎஸ் மகனுக்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர்.

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜூன் 1) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரவீந்திரநாத், “ஜெயலலிதா நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் பணி செய்வதே. அவ்வழியே எனது பயணம். மேலும் எனக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே என்னுடைய தலையாய கடமை. தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. ஆகவே தேவையற்ற கருத்துக்களை பதிவிடுவதைத் தவிர்த்து, நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள நிறை குறைகளை எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் பதவியை குறிப்பிட்டே தலைமை எடுக்கும் முடிவு இறுதியானது என்று ரவீந்திரநாத் கூறியிருக்கிறார்

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019