மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

பானி பூரி விற்குறதுலாம் கொள்கையில வருதா: அப்டேட் குமாரு

பானி பூரி விற்குறதுலாம் கொள்கையில வருதா: அப்டேட் குமாரு

‘இன்ஜினியரிங் படிச்சா வேலை கிடைக்கும்னு சொன்னாங்க இப்ப என்னடான்னா இந்தி படிச்சா வேலை கிடைக்கும்னு சொல்றாங்க’ அப்படின்னு 90ஸ் கிட்ஸ் புலம்பித் தள்ளுறாங்க. இன்ஜினியரிங் முடிச்சவங்க வேலை கேட்டதுக்கு பக்கோடா போடலாமேன்னு சொன்னவங்க இந்தி கத்துகிட்டோம்னு சொன்னா பானி பூரி விக்க சொல்வாங்க. போற போக்க பார்த்தா கடைசி வரைக்கும் நம்ம பொழப்பு மீம்ஸ் போட்டே முடிஞ்சுடுமான்னு நம்ம தம்பி ஒருத்தன் வருத்தப்படுறான். இனிமே தான் தீவிரமா களமாடனும்னு சொல்லி அனுப்பி வச்சுருக்கேன். ஆனாலும் என்ன பிரச்சினையா இருந்தாலும் நம்ம ஆளுங்க குசும்பு மட்டும் போகாது.. நிதியமைச்சருக்கு டிவிட்டுல வித்தியாசமா வாழ்த்து சொல்லிகிட்டு இருக்காங்க. அப்டேட்டை பாருங்க.

@Kozhiyaar

உலக கிரிக்கெட் வீரர்களுக்கு கூலியுடனான பயிற்சி வகுப்பு ஐபிஎல்!!!

@Kuttymaa*

கணவர் : i love you

மனைவி : நானும் தான், உங்களுக்காக இந்த உலகத்தையே எதிர்த்து சண்டை போடுவேன்....

கணவர் : ஆனால் நீ எப்ப பார்த்தாலும் என் கூட தான் சண்ட போடுற....?

மனைவி : நீங்கள் தானே என் உலகம்..

@udaya_Jisnu

காதலென்பது இளையராஜாவின் இசை,

திருமணமென்பது இளையராஜாவின் பேட்டி...

@mohanramko

ராஜ்யசபா மூலமா அமைச்சராகலாம்னு கனவு காணும் போது, தேர்தலில் நிற்க வைத்து, தோற்க வைப்பது தான் வாழ்க்கை

@manipmp

வெள்ளந்தி is a word

அவனொரு லூசுப்பய is an emotion

@rajakumaari

மனுஷங்க பண்ண கொலைக்கு டிக்டாக்கால் விபரீதம், ஃபேஸ்புக்கால் விபரீதம், டிவிட்டரால் விபரீதம், வாட்ஸ்அப்பால் விபரீதம்ன்னு தலைப்பு வெக்கிறதை எப்பத்தான் நிறுத்தப்போறாங்களோ

@asachanakkiyan

ராணுவ அமைச்சரா இருந்தப்ப ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்டாங்க, இப்ப நிதியமைச்சராகி இருக்காங்க..பேங்கு அல்லது ATM மிஷின் எதுவும் வாடகைக்கு கேட்டா கொடுப்பாங்களான்னு தெரியலையே.

@sultan_Twitz

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் : அமைச்சர் செங்கோட்டையன் #

இப்படிதான் நீட் தேர்வுக்கும் விலக்கு அளிப்போம்னு சொன்னிங்க செஞ்சிங்களா..?!

@RahimGazzali

விருப்பம் என்பது வேறு, திணிப்பு என்பது வேறு. விருப்பமில்லாமல் எதை திணித்தாலும் அது வாந்தியாக வெளியே வந்துவிடும். உணவுக்கு மட்டுமல்ல, அது மொழிக்கும் பொருந்தும்.

@Kozhiyaar

ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டா தானே GST கட்ட வேண்டியிருக்கும்,

வீட்லயே சமைச்சு சாப்பிட்டா எதுக்கு கட்டணும் என்று பொது மக்கள் GST வரியிலிருந்து தப்பிக்க அரிய யோசனைகளை தந்தவர் தாம் நம் நாட்டின் புது நிதியமைச்சர்!!!

@krishnaskyblue

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சுடிதார் உடன் துப்பட்டாவும் கண்டிப்பாக அணிய வேண்டும்~தமிழக அரசு.

//பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தை எப்புடி தடுத்தாரு பாரு எங்க ராஜா தந்திரி எடப்பாடி அய்யா

@shivaas_twitz

காய்கறி விக்கிற விலைக்கு, மாதக்கடைசியில் தொட்டுக்க ஊறுகாய் மட்டுமே வைக்கும் குடும்பத்தலைவி தான் அந்த வீட்டின் நிதி அமைச்சர்.

@star_nakshatra

"என்னை எவ்வளவு பிடிக்கும்" என்ற கேள்வி அடிக்கடி கேட்டால் புது ஜோடி

"எனக்காக என்னத்தை செய்ஞ்ச" என்ற கேள்வி அடிக்கடி கேட்டால் பழைய்ய்ய்ய்ய ஜோடி

@manipmp

அப்பா பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்ததன் அப்டேட் வெர்சன்தான் ஆன்லைன்ல அவர் அக்கவுண்டிலிருந்து பணத்தை ட்ரான்ஸ்பர் செய்துகொள்வது

@indupriya911

இப்படித்தான் கிட்டத்தட்ட 29, 30 வருசத்துக்கு முன்ன ஒருத்தன் வேணும்னே மெக்கானிக் மாணிக்கம் மூஞ்சி மேலயே கிரீஸ் டப்பாவ எட்டி உதச்சிருக்கான் ...

நல்லவேளை கிரீஸ் டப்பா பிளாஸ்டிக் ன்றாதால அவருக்கு ஒன்னும் ஆகல ...

பட் நேசமணிக்கு இரும்பு சுத்தியல்

@Kozhiyaar

நல்லா கவனிச்சு பாருங்க,

மற்ற முடியெல்லாம் கொட்டிட்டு இருக்கும் போது, வெள்ளை முடி மட்டும் உரம் போட்டு வளருகிற மாதிரி வளரும்!!!

@Annaiinpillai

பெரும்பாலான பேய் படங்கள் பெண்களின் பெயரிலேயே இருப்பது சூட்சும டிசைன் என்று தான் தோன்றுகிறது!

@19SIVA25

மத்திய அமைச்சர் பதவி என்பது எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான் - ஜெயக்குமார்

மைக்க ஓபிஎஸ் பையன் கிட்ட கொடுங்க எதுக்கு மந்திரினு கல்வெட்டுல போட்டாருன்னு கேட்போம்

@idumbaikarthi

ஒரிசா எம்.பி. பிரதாப் சாரங்கி ரொம்ப எளிமையானவருங்க !

எப்டிங்க சொல்றீங்க.?

அவர் மேல 8 குற்ற வழக்குதாங்க இருக்கு.

அப்ப சரி! அப்ப சரி!

@Kozhiyaar

பணக்காரங்க நிறைய நகைய வச்சி என்ன பண்றதுன்னு தெரியாம இருப்பாங்க!!

நடுத்தர வர்க்கமோ நகைய 'வச்சி' தான் எல்லாத்தையும் பண்ணுவாங்க!!

-லாக் ஆஃப்

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019