மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

மோடிக்கு ராமதாஸ் கண்டனம்!

மோடிக்கு ராமதாஸ் கண்டனம்!

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, அதுகுறித்த வரைவை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் நேற்று சமர்ப்பித்தது. அதில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவதாகவும், இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாணவர்கள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியை படிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் வரவேற்கத்தக்க வகையில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள ராமதாஸ், “மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. மும்மொழிக் கொள்கை கடந்த 50 ஆண்டுகளாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மட்டும் கடைபிடிக்கப் பட்டு வந்த நிலையில், இனிவரும் காலங்களில் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் நீடிக்கப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்தி மொழியை திட்டமிட்டு திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

“மாணவர்கள் விரும்பி இந்தியைப் படிப்பது வரவேற்கத்தக்கது. மாறாக, இந்தியை கட்டாயப்பாடமாக்கி விருப்பமில்லாத மாணவர்கள் மீதும் திணிப்பதைத் தான் பாமக கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது” என்றவர், இருமொழிக் கொள்கை தான் தங்களின் நிலைப்பாடு என்று அறிவித்திருக்கும் தமிழக அரசு, அதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் எந்த நிலையிலும் பின்வாங்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “மத்திய அரசும் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அதன் விருப்பங்களை மாநில அரசுகள் மீது திணிக்கக்கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயங்களை மட்டுமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019