மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

இணைந்த இசைக் கூட்டணி: மீண்டும் பொழியும் இளையநிலா!

இணைந்த இசைக் கூட்டணி: மீண்டும் பொழியும் இளையநிலா!

இளையராஜா இசையமைப்பில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கும் தமிழரசன் படத்திற்காக நீண்ட இடைவெளிக்குப் பின் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல் இன்று பதிவானது.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் தமிழரசன். விஜய் ஆண்டனி ரம்யா நம்பீசன் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு,ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா,சென்ட்ராயன், முனீஸ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்குகிறார்.

இளையராஜாவின் இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். கடந்த சில மாதங்களாக ராயல்டி சார்ந்த சர்சையால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தீர்ந்ததாக சில நாட்களுக்கு முன் இளையராஜா ஒரு தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் கூறியது நினைவிருக்கலாம். அதை உறுதிபடுத்தும் வகையில், நடந்த இந்நிகழ்வு இசை ரசிகர்களை உற்சாகமடையவைத்துள்ளது.

தமிழரசன் படத்திற்காகத் தான், இளையராஜா இசையில் 10 வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் ஏற்கனவே ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019