மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

85ஆம் ஆண்டில் விடுதலை!

85ஆம் ஆண்டில் விடுதலை!

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வெளியீடாகவும், திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ நாளேடாகவும், வெளிவந்துகொண்டிருக்கும் விடுதலை நாளேடு இன்று (ஜூன் 1) 85ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

நீதிக்கட்சியால் துவங்கப்பட்டு, தந்தை பெரியாரின் பொறுப்பில் நடத்தப்பட்ட விடுதலை இதழ், 1935ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் வாரமிருமுறை ஏடாக வெளிவரத் துவங்கியது. 1937 ஆம் ஆண்டிலிருந்து நாளிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பேரறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, மணியம்மையார் ஆகியோர் விடுதலை ஏட்டின் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். தற்போது திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி ஆசிரியராக இருந்துவருகிறார். லாப நோக்கிற்காக நடத்தப்படாமல் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களை பொதுமக்களிடம் சுமந்து செல்லும் ஊடகமான விடுதலை இதழ் 85ஆம் வருடத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இதனையொட்டி சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் இன்று பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியனை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து விடுதலை ஆசிரியர் வீரமணியுடன் வாசகர்கள் உரையாடவுள்ளனர்.

இரவு 7 மணியளவில் விடுதலை விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. பொத்தனூர் சண்முகம், கவிக்கொண்டல் செங்குட்டுவன், முகம் மாமணி ஆகியோருக்கு விடுதலை விருதுகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அரசு விளம்பரங்கள், நிதி உதவிகள் இல்லாமல், பரபரப்புச் செய்திகளை வெளியிடாமல் முழுக்க முழுக்க பகுத்தறிவு வழியில் தமிழர் நலன் காக்கும் நெறியில் ஓர் இலட்சிய ஏட்டை நடத்துவது என்பது இன்றைய சூழலில் மிகுந்த இடர் நிறைந்தது. எனினும் விடுதலை ஏடு, வணிக ஏடாக இல்லாமல், திராவிடர் இயக்க நலன் காக்கும் இலட்சிய ஏடாக தொடர்ந்துத் வெளிவந்துகொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 1 ஜுன் 2019