மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

ராஜமௌலி இயக்கத்தில் சாய்பல்லவி?

ராஜமௌலி இயக்கத்தில் சாய்பல்லவி?

சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவரும் நிலையில் அவர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமாக படைக்கும் ராஜமௌலி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் கதையை, சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் ஹைதரபாத் நகரத்தில் தொடங்கியது.

ஜூனியர் என்.டி.ஆர் , ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக் கனி, ப்ரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ராம் சரண் இளவயது அல்லூரி சீதாராமராஜுவாக நடிக்க, ஜூனியர் என்.டி.ஆர் கொமரன் பீமாக நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்துள்ளார். படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் டெய்ஸி எட்கர் ஏப்ரல் மாதம் படத்திலிருந்து விலகினார்.

எனவே அவரது கதாபாத்திரத்தில் யாரை நடிக்கவைப்பது என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது. பரினீதி சோப்ரா அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019