மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்!

பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்!

நதிகள் இணைப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 353 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, கடந்த மே 30ஆம் தேதி இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் பதவியேற்ற அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அமைச்சர்கள் தங்களது அறைக்குச் சென்று பணிகளை கவனிக்கத் தொடங்கினர். பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு இன்று (ஜூன் 1) கடிதம் எழுதியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், “மக்களவைத் தேர்தலில் உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கும், நீங்கள் பிரதமராக பதவியேற்றுக்கொண்டதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள விஜயகாந்த், தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழியும், பொருளாதாரம் மிக உயரிய வளர்ச்சியை எட்டும் என்றும் நம்புவதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019