மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

அமைச்சரவைக் கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

அமைச்சரவைக் கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் செல்போனுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை ஆட்சி செய்து வருகிறது. மாநில அமைச்சரவைக் கூட்டம் உட்பட அலுவலகக் கூட்டங்களில் பங்கேற்கும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உள்ள சிலர் கூட்டத்தில் கவனம் செலுத்துவதில்லை என்றும், தங்களது செல்போனில் இருக்கும் தகவல்களை மட்டுமே பார்க்கின்றனர் என்றும், இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது. இது பற்றி, டைம்ஸ் நவ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது பற்றிப் பேசிய உ.பி. தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், மாநில அமைச்சர்கள் சிலருக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். “அமைச்சரவைக் கூட்டத்தின்போது எல்லா அமைச்சர்களும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். செல்போன்களைப் பார்த்து கவனத்தைத் தவறவிடக் கூடாது என்று விரும்புகிறார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். கூட்டம் நடைபெறும்போது சில அமைச்சர்கள் வாட்ஸ்அப் தகவல்களைப் பார்த்து வருகின்றனர். அதனாலேயே இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.

இதற்கு முன்னர், அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பவர்களில் சிலர் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அல்லது சைலண்ட் மோடில் வைப்பது போன்ற வழிமுறைகளைக் கையாண்டனர். தற்போது ஹேக்கிங், மின்னணு திருட்டு வழியாகத் தகவல்கள் வெளியே போகலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இனிமேல் உ.பி. அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுமிடத்தில் தங்களது செல்போன்களை டோக்கன் பெற்று ஒப்படைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் இந்த முறையைக் கடந்த ஆண்டு முதல் பின்பற்றி வருகின்றனர்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019