மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு?

புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு?

புதிய கல்விக் கொள்கை வரைவில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

புதிய தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, நேற்று 484 பக்கங்கள் கொண்ட வரைவை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் சமர்ப்பித்தது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து வரும் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரைவு அறிக்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “ இந்தி பேசும் மாநிலங்களிலுள்ள மாணவர்கள் இந்தி, ஆங்கிலத்துடன் இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கக்கூடிய நவீன மொழிகளில் ஒன்றை விருப்பப் பாடமாக தேர்வு செய்துகொள்ளலாம். இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாணவர்கள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியைப் படிக்க வேண்டும். இந்த நடைமுறை 6ஆம் வகுப்பிலிருந்து தொடங்குகிறது” என்று அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிக்கப்படுவதாகத் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, “திமுக எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை கொண்டிருக்கவில்லை. எனினும் மொழித் திணிப்பைத் தொடர்ந்து எதிர்க்கும். அது இந்தியாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் திமுக எதிர்க்கும். நாடாளுமன்றத்திலும் இதனை எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்பரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“8ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்,

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019