மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

மோடி அமைச்சரவை: 22 பேர் மீது குற்ற வழக்குகள்!

மோடி  அமைச்சரவை: 22 பேர் மீது குற்ற வழக்குகள்!

புதிதாகப் பதவி ஏற்றுள்ள 51 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் என்றும், 22 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றது. மோடி தலைமையில் நேற்று முன் தினம் (மே 30) புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கான இலாகாக்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களின் குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

தேர்தல் தொடர்பான விவரங்களை ஆராய்ந்து வெளியிட்டு வரும், அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்), ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புதிய அமைச்சர்களில் 58 பேரில் 56 பேரின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக ஏடிஆர் தெரிவித்துள்ளது.

அதன்படி, 22 பேர், (39 சதவிகிதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 பேர், (29 சதவிகிதம்) மீது கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்குத் தீங்கு விளைவித்தல், தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ஆவது மக்களவை அமைச்சர்களைக் காட்டிலும், 17ஆவது மக்களவையில் குற்ற வழக்குகள் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், தீவிர குற்ற வழக்குகள் உள்ளவர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் ஏடிஆர் ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். குறிப்பாக அமித்ஷா, பியுஷ் கோயல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு அமைச்சருக்கு ரூ.14.72 கோடி சொத்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019