மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் ஏமாற்றம்!

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் ஏமாற்றம்!

வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் தொடர்ந்து வருவதால், அங்கு பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக, தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய இந்த தடையால், விசைப்படகுகள் தமிழகக் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விசைப்படகுகளைச் சீரமைத்து, வர்ணம் பூசும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஜூன் 15ஆம் தேதியோடு இந்த தடைக்காலம் முடிவடையவுள்ளது. இதனால், உள்ளூர் மீன் சந்தையின் தேவையை நிறைவேற்றும்பொருட்டு, பைபர் படகுகளில் மீனவர்கள் குறைந்த தூரம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

கடந்த வாரம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று பலமாக வீசியது. அதோடு கடல் சீற்றமும் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இந்த சூழல் நேற்றும் (மே 31) ஏற்பட்டது. அங்குள்ள ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த சூறைக் காற்று வீசியது. கூடவே, கடல் சீற்றமும் உண்டானது.

இதன் காரணமாக, சுமார் 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இன்றும் அப்பகுதியில் கடல் சீற்றம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பைபர் படகு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019