மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

குற்றாலத்தில் முகாமிட்ட விஜய்சேதுபதி

குற்றாலத்தில் முகாமிட்ட விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

பேட்ட, சூப்பர் டீலக்ஸ், என இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டிலும் முழுக்க வித்தியாசமான வேடம் ஏற்று நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் பல படங்கள் தயாராகிவருகின்றன. வாலு,ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துவருகிறார்.

நிவேதா பெத்துராஜ், ராஷிகண்ணா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரை, கம்பம், தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதி மற்றொரு புதிய படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் அந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019