மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

தோற்றுப்போவேன் என்று அஞ்சியே...!

தோற்றுப்போவேன் என்று அஞ்சியே...!

நமக்குள் தேடுவோம் 9 - ஆசிஃபா

தோல்வியை நினைத்து பயப்படுவது நம்முடைய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. எங்கே தவறாகச் செய்துவிடுவோமோ என்று கவலைப்படுவது, தோற்றுவிடுவோமோ என்று அஞ்சுவது ஆகியவை நம்மைப் பல விதங்களிலும் முடக்கிவிடுகின்றன.

பரீட்சை, சாலை நெரிசல், காத்திருப்பு என்று சில விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அது எல்லாவற்றிலுமே, இந்த பயமோ குழப்பமோ ஒளிந்திருக்கும். காரணம், தோல்வி என்பது அவ்வளவு பெரிய விஷயமாக நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தால், வெற்றியும் தோல்வியும் ஒன்றில்லாமல் மற்றது இருக்க முடியாது. யாராவது தோற்றால்தானே வெற்றி என்ற சொல்லுக்கு மதிப்பு? யாருமே தோற்காவிட்டால் வெற்றி என்றால் என்ன என்று சொல்வோம்?

இதைப் புரிந்துகொண்டாலே, வாழ்க்கை சற்று எளிமையாகிவிடுகிறது. ஆனால், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘வெற்றி வெற்றி’ என்று முழக்கமிடும் அதே அளவிற்குத் தோல்வி என்றால் ஏற்றுக்கொள்ளவே முடியாதது என்றும் மனதில் பதியவைக்கிறார்கள். இங்குதான் சிக்கல் ஆரம்பமாகிறது. தோல்வியைக் கண்டு பதற்றமடையும் ஒவ்வொரு முறையும் செய்யும் வேலையில் கவனமிழக்கிறோம். அதாவது, தோல்வி பயமே பல சமயம் தோல்வியை, பின்னடைவைத் தருகிறது.

தோல்வியை எதிர்கொள்ள அஞ்சாதவர்களால்தான் வெல்ல முடியும்.

தவறாக ஒன்றைச் செய்வதும் தோற்றுப்போவதும் அன்றாடத்தின் ஒரு நிகழ்வு. அந்தத் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அதைத் தாண்டி வர வேண்டும். அதற்கு மேல் அந்தத் தோல்விக்குக் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நன்றாக மனதில் பதிய வைத்துவிட்டால் நம் வேலை தெளிவாக நடப்பதோடு, நாமும் நிம்மதியாக இருக்கலாம்.

ரன், ரன், லைஃப் இஸ் எ ரேஸ் என்று நண்பன் படத்தில் வரும் வசனத்தை எத்தனை பேர் தினமும் சொல்லிக்கொள்கிறோம்? எனக்குத் தெரிந்த ஒருவர் தினமும் காலை கண்ணாடி முன்பு நின்று இதையும் வேறு சில வசனங்களையும் சொல்லிக்கொள்வாராம். கேட்டால், செல்ஃப் மோட்டிவேஷனாம்! தன்னைத் தானே ஊக்குவித்துக்கொள்கிறாராம்!

கிளிப்பிள்ளைபோல பாஸிடிவ் வாசகங்களைச் சொல்லிக்கொண்டிருப்பது நிச்சயமாக நம்மை ஊக்குவிக்காது. ஒரு சில காலம் இதுதான் உண்மை என்ற மாயைக்குள் சிக்கி உற்சாகமாக இருப்போம். ஆனால், நிஜம் புரியவரும்போது அந்த ஏமாற்றம் மிகப் பெரிதாக இருக்கும்.

வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல மோட்டிவேஷன் தேவைதான். ஆனால், அதற்காகத் தோல்வியின் மீது அச்சத்தையும் ஒவ்வாமையையும் வளர்த்துக்கொள்வது ஆபத்தானது. தோல்வியை மூட்டைகட்டிப் பரணில் போட்டுவிடுவது நமக்கு நாமே செய்துகொள்ளும் மிகப்பெரிய தவறு.

சிறு வயதில் பரீட்சை, சமையல் செய்வது, புதிய இடத்திற்குப் போவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் தோல்வியை ஏற்க மறுக்கும் நாம், காலப்போக்கில் எந்தவொரு சூழலிலும் தோல்வியை, ஏமாற்றத்தை ஏற்க மறுத்துவிடுகிறோம்.

தோல்விக்கு அஞ்சாதவர்களால்தான் வெற்றியை அடைய முடியும்.

Spoiled Child என்று சொல்வோம். செல்லம் கொடுத்து, பிடிவாதம், கோபம் என்று இருக்கும் குழந்தைகள் இந்த வகைமைக்குள் அடங்குவார்கள். யதார்த்தத்துக்குத் தொடர்பே இல்லாத மிகையான பாஸிடிவிட்டி, மோட்டிவேஷன் ஆகியவையும் தோல்வியை, ஏமாற்றத்தை ஏற்க மறுக்கும் spoiled person ஆக நம்மை மாற்றிவிடக்கூடும்.

இந்த அச்சம் தேவைதானா?

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 1 ஜுன் 2019