மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிழைகள் நேர்ந்திருக்கலாம்: கமல்

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிழைகள் நேர்ந்திருக்கலாம்: கமல்

ஓட்டுக்கள் காணாமல் போய்விட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் ‘இந்து தீவிரவாதி’ கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் இன்று (ஜூன் 1) பிற்பகல் 3 மணிக்கு கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஓட்டுக்கள் காணாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஒட்டுமொத்தமாக அவ்வாறு நாம் சொல்லிவிட முடியாது. பிழைகள் நேர்ந்திருக்கலாம். அது என்னவென கண்டுபிடிக்க வேண்டியது நம்முடைய ஜனநாயக கடமை” என்று தெரிவித்தார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழகம் புறக்கணிப்படுகிறதோ என்ற அச்சம் எழுந்திருக்கிறதே என்ற கேள்விக்கு, “அது அனைவருக்கும் இருக்கிறது. அது அச்சமாக இருக்க வேண்டியதில்லை. சந்தேகமாக மட்டும் இருந்தால் போதும். மோடியின் அடுத்த 5 ஆண்டு ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது இந்தியனாக என்னுடைய ஆசை” என்று பதிலளித்தார்.

அமைச்சரவையில் தமிழகத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை விட வாய்ப்பு இல்லை என்பதாகவே பார்க்க முடிகிறது. தமிழக மக்களின் குரல் அமைச்சரவையில் கேட்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தமிழகத்துக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்பது தேர்தல் வாக்குறுதி போல உள்ளது” என்றார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019