மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

ராஜீவ் காந்தியை மறந்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

ராஜீவ் காந்தியை மறந்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 9 மக்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். இன்று டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு செல்லும் முன்பு... கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளருமான டாக்டர் செல்லகுமார் மட்டுமே நேற்று ராஜீவ் காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நேற்று (மே 31) மாலை சென்னை அண்ணா நகரிலுள்ள தனது வீட்டில் இருந்து ஆதரவாளர்கள் புடை சூழ புறப்பட்ட செல்லகுமார் மதுரவாயல், பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கே திரண்ட லோக்கல் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், “திமுக தலைவர் ஸ்டாலின் தன் கட்சி சார்பாக ஜெயிச்ச எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் கூட்டிக்கொண்டு பெரியார், அண்ணா, கலைஞர்னு தங்கள் கட்சியின் முன்னோடிகளின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துறாரு. ஆனா தமிழ்நாடு காங்கிரஸ்ல 9 பேர் எம்பியாக ஜெயிச்சும் நீங்க மட்டும்தான் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்குத் தேடி வர்றீங்க. மத்த எம்.பி.க்கள் எல்லாம் ராஜீவ் காந்திய மறந்துட்டாங்களா? காங்கிரஸ் தலைவரே எல்லா எம்பிக்களையும் கூட்டிக்கிட்டு இங்க வந்திருக்கலாமே? தேர்தல் பிரச்சாரத்துலயே மோடி சொன்ன பிறகுதானே ராஜீவ் காந்தியை பத்தியே காங்கிரஸ் காரங்க பேச ஆரம்பிச்சாங்க?” என்று செல்லகுமாரிடம் கேட்டனர்.

இதை எதிர்பார்க்காத டாக்டர் செல்லகுமார், “மத்த எம்.பி.க்கள் எல்லாரும் ஒருவேளை பதவியேற்றுக் கொண்ட பிறகு வருவாங்கனு நினைக்கிறேன். ஆனா எனக்கு தலைவர் ராஜீவ் காந்தியை இங்க வந்து பார்க்காம பதவி ஏத்துக்க மனசு விரும்பல. என்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்தது ராஜீவ் காந்தி. அதனால் அவரை மறந்துவிட்டு என்னால் அரசியல் செய்ய முடியாது. அடுத்து காமராஜர் நினைவிடத்துக்குதான் போறேன்” என்று சொல்லி அங்கிருந்து விடைபெற்றார்.

வழக்கமாக காமராஜர் நினைவிடத்தை மாலை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பூட்டிவிடும் நிலையில் அவர்களிடம் பேசி செல்லகுமார் செல்லும் வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்தனர் காங்கிரஸ் நிர்வாகிகள். பின் இரவு காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதோடு ஆச்சரியப்படும் வகையில் அங்கே இருந்த மொழிப்போர் தியாகிகளுக்கான மணிமண்டபத்திலும் சென்று தமிழ்மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு டெல்லி புறப்பட்டார் கிருஷ்ணகிரி எம்பி. செல்லகுமார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019