மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

அடுத்த பேட்மேன் தேர்வு: வலுக்கும் எதிர்ப்பு!

அடுத்த பேட்மேன் தேர்வு: வலுக்கும் எதிர்ப்பு!

பிரபல சூப்பர் ஹீரோவான பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க ராபர்ட் பேட்டின்சன் தேர்வாகியுள்ளார். பேட்மேன் ரசிகர்கள் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இவரை தேர்வு செய்யவேண்டாம் என முன்னரே பெட்டிஷன் அனுப்பியுள்ள நிலையில் ரசிகர்கள் இத்தேர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வார்னர் பிரதர்ஸின் பிரபல டி.சி காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தி டார்க் நைட் ட்ரையாலஜி உலகமெங்குமுள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. நோலன் இயக்கத்தில் கிறிஸ்டியன் பேல் பேட்மேனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் vs சூப்பர் மேன், ஜஸ்டிஸ் லீக் போன்ற படங்களில் பென் அஃப்லெக் பேட்மேனாக நடித்திருந்தார். ஆனால், ரசிகர்களால் அவரை தங்கள் ஆதர்சமான பேட்மேனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவுள்ள பேட்மேன் ட்ரையாலஜியில் கதாநாயகனாக நடிக்க சில இளம் நடிகர்களின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அதில் முன்னணியாக இருப்பது ராபர்ட் பேட்டின்ஸன். ‘ட்வைலைட்’ படத்தின் பாகங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் பேட்மேனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானவுடன் ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதில் உச்சகட்டமாக 4500க்கும் அதிகமானோர் சேஞ்ச் (change.org) என்ற அமைப்பின் வலைதளத்தில் ‘வார்னர் பிரதர்ஸ் இதை செய்யாதீர்கள். ராபர்ட் பேட்டின்ஸனை பேட்மேனாக நடிக்க வைக்காதீர்கள்’ என பெட்டிஷன் போட்டு வந்தனர்.

அதே சமயம் டோல்கின், எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படங்களில் நடித்த நிக்கோலஸ் ஹால்ட் என்ற நடிகரும் வார்னர் பிரதர்ஸின் தேர்வு பட்டியலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளியான தகவலில் ராபர்ட் பேட்டின்ஸனே அடுத்த பேட்மேனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் உறுதியாகின. பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் மேட் ரீவ்ஸ் புதிய பேட்மேன் ட்ரையாலஜியை இயக்கவுள்ளார்.

ஆனால், ரசிகர்கள் இச்செய்தியால் அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வார்னர் பிரதர்ஸின் இம்முடிவிற்கு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். எதிர்ப்புகளை கடந்து மக்கள் அபிமானத்தை பெறுவாரா புதிய பேட்மேன் என்பதை இனி பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019