மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராகக் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. 2014ஆம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இம்முறை பெற்றது.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி காங்கிரஸ் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக காரிய கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைவர் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் இதற்குக் கட்சியினர் மறுப்புத் தெரிவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது,

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் குழு கூட்டம் இன்று (ஜூன் 1) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய அரங்கில் நடைபெற்றது. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களின் இந்த முதல் கூட்டத்தில், மீண்டும் சோனியா காந்தியின் பெயரைக் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் பதவிக்கு மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதைத்தொடர்ந்து அவரை அனைவரும் ஏகமானதாகத் தலைவராகத் தேர்வு செய்தனர். இதன்மூலம் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுக்குமான காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு சோனியா காந்தி தலைவராக இருப்பார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸுக்கு வாக்களித்த 12.13 கோடி மக்களுக்கு சோனியா காந்தி நன்றி தெரிவித்தார். ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாக இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பதற்கான வியூகங்கள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019