மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

பொறியியல்: விண்ணப்பங்கள் குறைந்தது!

பொறியியல்: விண்ணப்பங்கள் குறைந்தது!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் பிஇ, பிடெக் இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த ஆண்டு, பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, கடந்த 2ஆம் தேதியன்று தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 43 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நேற்று (மே 31) கடைசி நாள் என்பதால், இரவு 12 மணி வரை மாணவ மாணவியர் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தனர். வரும் 3ஆம் தேதியன்று, விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்காக 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 1.45 லட்சம் பேரும், 2016ஆம் ஆண்டில் 1.38 லட்சம் பேரும் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள நிலையில், விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019