மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

நீயா 2: சேட்டிலைட் உரிமை விற்பனைக்குத் தடை!

நீயா 2: சேட்டிலைட் உரிமை விற்பனைக்குத் தடை!

நீயா-2 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்யத் தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீயா 2 திரைப்படத்தில் ஜெய், ராய் லக்ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேதரின் தெரஸா ஆகியோர் நடித்துள்ளனர். சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்துள்ளார்.

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விஜய் கோத்தாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஜம்போ சினிமாஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான ஏ.ஸ்ரீதர் ரூ.1.10 கோடி என்னிடம் கடன் வாங்கினார். இந்தத் தொகையை நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மெல்லிசை என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக என்னிடம் இருந்து வாங்கினார். என்னிடம் வாங்கியத் தொகையில் ரூ.75 லட்சத்தை திருப்பிக் கொடுத்த அவர் ரூ.35 லட்சத்தைத் திருப்பித் தரவில்லை.

இந்த நிலையில் ஏ.ஸ்ரீதர் நீயா-2 என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். கடந்த மே 24ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. எனவே எனக்கு தர வேண்டிய எஞ்சியத் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல், இந்த திரைப்படத்தை தொலைக்காட்சி சேனல்களில் வெளியிடும் சாட்டிலைட் உரிமத்தை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்” எனக்கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சசிகலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஜி.மோகனகிருஷ்ணன், தயாரிப்பாளர் தரப்பில் வழக்குரைஞர் என்.ஜி.துரைராஜன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை நீயா-2 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்வதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்யத் தடை ஏற்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019