மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

ரிலீஸுக்கு தயாராகும் ‘கள்ளன்’!

ரிலீஸுக்கு தயாராகும் ‘கள்ளன்’!

கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடிக்கும் கள்ளன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சந்திரா இயக்கும் கள்ளன் திரைப்படம் வேட்டையாடுவதை தொழிலாகக் கொண்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. வேட்டையாடுதல் அரசினால் தடை செய்யப்பட்ட பின் அம்மக்களுக்கு வேலை இல்லாமல் போகிறது. கதையின் நாயகனும் அவனது இரு நண்பர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேட்டையாட துப்பாக்கிகளை உருவாக்க முயல்கின்றனர். ஆனால் அதுவும் கைகூடாமல் போகிறது. உடனடியாக பொருள் ஈட்ட செல்வந்தர் ஒருவரின் வீட்டில் திருட முடிவுசெய்கின்றனர். அந்த முயற்சி அவனது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் படத்தின் பணிகள் தற்போது நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகிறது. போலீஸில் பிடிபட்ட கரு.பழனியப்பன் சக கைதிகளுடன் காவல்நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

1988-89 காலகட்டத்தில் கதை பயணிக்க 1975 காலகட்டத்தைச் சார்ந்த காட்சிகள் பிளாஷ் பேக்கில் இடம்பெறுகின்றன. நிகிதா, மாயா என இரு புதுமுக நடிகைகள் நடித்துள்ளனர். சௌந்தர்ராஜா, நமோ நாராயணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே இசையமைக்க, தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். எம்.எஸ்.பிரபு, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். அகமத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். விரைவில் இப்படத்தின் டிரெய்லர், டீசர் மற்றும் ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019