பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!


17ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 17 முதல் ஜூலை 26 வரை நடைபெறவுள்ளது.
17ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிந்து மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். மோடியுடன் சேர்த்து 58 அமைச்சர்கள் மே 30ஆம் தேதி பொறுப்பேற்றனர். இதையடுத்து முதல் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17 முதல் ஜூலை 26 வரையிலான 40 நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர். இதையடுத்து 19ஆம் தேதி இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
ஜூன் 19ஆம் தேதியே புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஜூன் 20ஆம் தேதி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1ஆம் தேதி 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய கூட்டத்தொடரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதமும் இக்கூட்டத்தொடரில் நடைபெறுகிறது.
நேற்று (மே 31) நடந்த கேபினட் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜூலை 5ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஜூலை 4ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது” என்றார். நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, உடல்நலக் குறைவு காரணமாக தற்போதைய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இந்திரா காந்தியை அடுத்து நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் நிர்மலா சீதாராமன் ஆவார்.
.
.
மேலும் படிக்க
.
.
.
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!
.
ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!
.
.
டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?
.
தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!
.
.