மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

உங்கள் குடும்பத்தில் பிரச்சினையா?

உங்கள் குடும்பத்தில் பிரச்சினையா?

சத்குரு ஜகி வாசுதேவ்

கேள்வி: எனக்கு நெருக்கமான என் குடும்பத்தினரே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். எதிலும் என்னோடு, என் சிந்தனையோடு அவர்கள் ஒத்துப் போவதில்லை. இவர்கள் எனக்கு உண்டாக்கும் இந்த மன உளைச்சலிலிருந்து நான் எப்படி விடுபடுவது?

பதில்: அவர்களை ஏன் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறீர்கள்? உங்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், அல்லது உண்மையிலேயே அவர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படி உங்களுக்கு நெருக்கமானவராக இருக்க முடியும்? அப்படி நீங்கள் சொல்வது பொய். வேண்டுமானால் நீங்கள் ஒரே வீட்டில் வசிக்கலாம். ஆனால், அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் இல்லை. இல்லையா?

இவரை எப்படித் தவிர்ப்பது, அது என்னை பாதிக்காமல் எப்படிப் பார்த்துக்கொள்வது என்பதை எல்லாம் சொல்வதற்காக நான் இங்கு இல்லை. நான் முன்பிருந்தே சொன்னதுபோல், நீங்கள் ஏதோ ஒன்றை விட்டுவிலகுவதாலோ, அல்லது விட்டுக்கொடுப்பதாலோ அதிலிருந்து விடுதலை பெற்றிட முடியாது. நீங்கள் உங்கள் வீட்டை விட்டுச் சென்றாலும், வேறு எதை விடுத்தாலுமே உங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்காது.

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள் என்பதை முதலில் பாருங்கள். இதற்கு நீங்களே ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

கேள்வி: இல்லை, அவர்களே அப்படித்தான்.

சத்குரு: உங்களுக்கு அவர்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், அதைப் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிராகவே இருக்கிறீர்கள் என்றால் ஏன் சேர்ந்து வசிக்கிறீர்கள்?

கேள்வி: அப்படி என்றால் நான் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிடலாமா?

சத்குரு: அவரை விட்டுச் செல்லுங்கள் என்று நான் உங்களிடம் சொல்லவில்லை! மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் அதற்கு முன் உங்கள் உள்தன்மை இன்னும் தேவையான அளவிற்கு ஸ்திரமாக இல்லை என்பதைப் பாருங்கள். அதனால்தான், உங்களிடம் யார் எதைக் கூறினாலும் நீங்கள் அதுவாகவே ஆகிவிடுகிறீர்கள். நான்கு பேர் உங்களை முட்டாள் என்று கூறினால், நீங்கள் அப்படியே ஆகிவிடுவீர்கள்.

ஒரு கூட்டத்தில் இதை ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். "அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவர் என்னை முட்டாள் என்று அழைத்துவிட்டார். வழக்கமாக அமைதியாக இருக்கும் நான், கடந்த ஒருவாரமாக நொறுங்கிப் போய்விட்டேன். நான் அவருக்கு எதிராக வழக்குப்போடத் திட்டமிட்டு இருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சுவாமிஜி?" என்று கேட்டார்.

யாரோ சொன்ன அந்த ஒரு வார்த்தை, உங்களுடைய அமைதியை ஒரு வாரத்திற்குச் சீர்குலைத்திருக்கிறது! இதற்கு என்ன அர்த்தம்? அப்படியென்றால் அவர் என்ன சொன்னாரோ அது உண்மைதானே?

உங்கள் உள்தன்மை இன்னும் உறுதியாகவில்லை. அதனால்தான் யார் எதைக் கூறினாலும் நீங்கள் அதனால் பாதிப்பிற்கு உள்ளாகிறீர்கள். உண்மையில் யாராலும் உங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது. அவருக்கு என்ன தெரியுமோ அதைத்தான் அவர் சொல்கிறார், செய்கிறார். வாழக்கையை அவர் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறாரோ அப்படியே அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், அவர்கள் என்ன சொன்னாலும் அதனால் அவதியுறாமல், என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகப் பார்த்து நீங்கள் செயல்பட முடியும் இல்லையா? நீங்கள் உங்களுக்குள் உறுதியாக இல்லாததால்தான் காற்றடிக்கும் திசைகளில் எல்லாம் செல்கிறீர்கள். இந்தப் போராட்டங்கள் எல்லாமே இதனால்தான்.

நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வேறெங்கோ சென்றாலும், அங்கும் வேறு யாரேனும் உங்களுக்கு எதிராகப் பேசவோ, செயல்படவோ முடியும். இந்த உலகில் யாரும் உங்களைத் தனியே விடப்போவதில்லை. நீங்கள் எங்கே சென்றாலும், அங்கும் உங்களைப் பிடித்துக்கொள்வார்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கையை எந்த அளவிற்குப் புரிந்துகொண்டிருக்கிறாரோ, அதன் அடிப்படையில்தான் எல்லாவற்றையும் செய்கிறார். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாது. அதை நல்லது, எதிரானது என்று வகுத்து, நீங்கள்தானே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள்?

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019