மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

அமைச்சரவையில் தமிழகம் உள்நோக்கத்துடன் புறக்கணிப்பு: காங்கிரஸ்

அமைச்சரவையில் தமிழகம் உள்நோக்கத்துடன் புறக்கணிப்பு: காங்கிரஸ்

மத்திய அமைச்சரவையில் தமிழகம் உள்நோக்கத்துடன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டது. அதில் தமிழகத்திலிருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை. நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என பாஜகவினர் கூறினாலும் கூட, பொன்.ராதாகிருஷ்ணனை போல தமிழக அரசியல் களத்தில் இருப்பவர்கள் இல்லை. கூட்டணிக் கட்சியான அதிமுகவிலிருந்து கூட யாரும் அமைச்சரவையில் இடம்பெறாததால், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பான கேள்விக்கு, இன்னும் வாய்ப்புகள் வரும் என்று தமிழிசை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (மே 31) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அமைச்சரவையில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அதிமுக சார்பாக எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கெனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அதிமுக பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பாஜக அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும், அதிமுகவிலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து,“இதன்மூலம் அதிமுகவை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. மோடிக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசிய காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடைபெற்றிருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. அதிமுகவை புறக்கணித்திருந்தாலும், பாஜகவை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரில் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்” என்றவர்,

கேரளாவிற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக வி. முரளிதரனுக்கு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப்போல தமிழகத்திற்கும் வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கிற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது. எனவே, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி தான்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 1 ஜுன் 2019