மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

இலங்கை: சிக்கியது பயங்கரவாதியின் லேப் டாப்!

இலங்கை: சிக்கியது பயங்கரவாதியின் லேப் டாப்!

இலங்கை தொடர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியாக செயல்பட்ட பயங்கரவாதியின் லேப் டாப் கம்ப்யூட்டரை இலங்கை போலீஸார் நேற்று (மே 31) கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கை தலைநகர் கொழும்பு சுற்று வட்டாரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் தேசிய ஜவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதன் தலைவரான முகமது ஜாஹ்ரான் ஹாஷிம் என்பவர்தான் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என்றும் இலங்கை போலீசார் அறிவித்தனர். தற்கொலை குண்டுவெடிப்பில் ஷாஷிம் கொல்லப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாதம் கழித்து அவரது லேப்டாப் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஊடகங்கள் போலீசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன

தேசிய தவ்ஹித் ஜமாத் தலைவர் ஜாஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய லேப்டாப், 35 லட்ச ரூபாய் பணம் ஆகியவை உளவுத்துறையின் தகவலின் பேரில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அந்த அமைப்பின் அம்பாரா பகுதி தலைவர் கல்முனை ஷ்யாம் சில வாரங்களுக்கு முன் இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். ஜாஹ்ரான் ஹாஷிம் தனது லேப்டாப்பை ஷ்யாமிடம் கொடுத்து மிகவும் பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியதாகவும், அந்த லேப்டாப் தற்போது அட்டலிசேனா லகூன் பகுதியில் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் உடனடியாக உளவுப் பிரிவு மூலம் போலீசாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் நடத்திய சோதனையில் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி பயன்படுத்திய லேப் டாப் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் என்னென்ன விவரங்கள் இருக்கின்றன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு இந்த லேப்டாப் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019