மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

கொரில்லாவுடன் திருடும் ஜாலி திருடர்கள்!

கொரில்லாவுடன் திருடும் ஜாலி திருடர்கள்!

ஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவான கொரில்லா திரைப்படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட நேற்று (மே 31) முதல் இது இணையத்தில் வைரலாகிவருகிறது.

காமெடி என்டர்டெயினராக உருவாகியிருக்கும் இப்படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி ஷாலினி பாண்டே ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சிறப்பம்சமாக நிஜ சிம்பன்ஸியும் படத்தில் நடித்துள்ளது. குழந்தைகளை ஈர்க்கும் வகையில் இதன் ட்ரெய்லர் உருவாகியுள்ளது.

பணத்தேவைக்காக பேங்கை கொள்ளையிட முடிவு செய்யும் ஜீவா மற்றும் அவரது குழுவினர் கொரில்லா முகமூடியுடன் திருட முயல்கின்றனர். மேலும் இவர்களது சிறப்புத் தோழனாக நிஜ சிம்பன்ஸியும் களமிறங்க கலகலப்பாக உருவாகியுள்ளது இதன் ட்ரெய்லர். சமீபத்திய டிரெண்டிங்கான பிரே ஃபார் நேசமணி என்ற அறிவிப்புடன் வெளியான இதன் ட்ரெய்லரை தனுஷ் நேற்று மாலை(மே 31)வெளியிட்டுள்ளார்.

டான் சாண்டி இயக்கியிருக்கும் இப்படத்தில் யோகி பாபு, ராதா ரவி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆல் என் பிக்சர்ஸ் சார்பில் டி.விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள கொரில்லா வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கொரில்லா ட்ரெயலர்

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019