மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

விரைவில் புதிய கல்விக் கொள்கை!

விரைவில் புதிய கல்விக் கொள்கை!

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை பின்னர் 1992ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன் பின் இதுவரையில் தேசிய கல்விக் கொள்கையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்க, முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (மே 31) மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் கஸ்தூரி ரங்கன் குழு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவைச் சமர்ப்பித்துள்ளது. 484 பக்கங்கள் அடங்கிய இந்த வரைவில் தேசிய கல்வி ஆணையம் அமைப்பது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வைத் தடுப்பது போன்ற பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து ஜூன் 30ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019