மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

தண்ணீர் பஞ்சம்: அரசுக்கு முத்தரசன் கோரிக்கை!

தண்ணீர் பஞ்சம்: அரசுக்கு முத்தரசன் கோரிக்கை!

தமிழகம் முழுவதும் ஒரு குடம் 10 ரூபாய்க்கு விற்கும் அளவுக்குக் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாகவும், அதனைத் தீர்க்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உட்படத் தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ வாட்டர் டேங்கர் லாரிகளின் எண்ணிக்கைய்யை 1,000 ஆக உயர்த்தியது குடிநீர் வாரியம். ஆனால், பொதுமக்கள் மெட்ரோ குடிநீரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். அதில் பதிவு செய்தாலும், நீர் வருவதற்குப் பத்து நாட்கள் ஆவதாகக் கூறுகின்றனர்.

தனியார் தண்ணீர் லாரிகள் மூலமாக சென்னை பழைய மகாபலிபுரம் சாலை உட்படப் பல பகுதிகளில் நீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காகப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. சுமார் 1,500 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் தற்போது ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. ஆனாலும், மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் நிலை உள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார். விருதுநகர் மாவட்டம் வத்தியிராயிருப்பில் அவர் பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். “ஒரு குடம் 10 ரூபாய் விற்கும் அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது ஆனாலும் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. 1,500 ரூபாய் விற்ற டேங்கர் லாரி தற்போது 5,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த தண்ணீரும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019