மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

கிச்சன் கீர்த்தனா: பனீர் ஃப்ரைடு ரைஸ்

கிச்சன் கீர்த்தனா: பனீர் ஃப்ரைடு ரைஸ்

ஸ்கூல் ரெசிப்பிகள்

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாட்கள் நெருங்கிவிட்டன. காலையில் எழுந்ததும் குழந்தைகளுக்கான மெனுவைப் பற்றி யோசிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தினம் ஒரு புதுமையான உணவைக் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி தயாரித்துக் கொடுப்பது உண்மையில் சவாலானது. ஆனால், டென்ஷனே இல்லாமல் குழந்தைகளுக்கான மெனுவை ஆரோக்கியமானதாகவும் புதுமையானதாகவும் தயாரித்துக் கொடுக்க உதவும் இந்த ஸ்கூல் ரெசிப்பிகள்

என்ன தேவை?

பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்

பனீர் துண்டுகள் - ஒன்றரை கப்

கேரட் (சிறியது) – ஒன்று

குடமிளகாய் (சிறியது) – ஒன்று

வெங்காயத் தாள் - 5 கொத்து

மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - முக்கால் டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வெந்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி, கொஞ்சம் ஆலிவ் ஆயில் சேர்த்து ஆறவிட்டு, உதிர்த்து வைக்கவும் (இதனை முதல் நாளே செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்). கேரட், குடமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கவும். பனீரைக் கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். மிருதுவானவுடன், கைகளால் உதிர்த்துக்கொள்ளவும். வாயகன்ற ஒரு பானில் (pan), மீதமுள்ள ஆலிவ் ஆயில் சேர்த்து கேரட், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கும்போது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

காய் வெந்தவுடன், பனீர், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்துக் கலக்கவும். வேகவைத்த சாதத்தைச் சேர்த்து, சாதம் உடையாமல் கலந்து இறக்கவும்.

குறிப்பு: பீன்ஸ், ஸ்வீட் கார்ன் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: தக்காளி சாஸ், சோயா சாஸ் தலா ஒரு டீஸ்பூன் சேர்த்தும் இந்த ஃப்ரைடு ரைஸ் செய்யலாம்

என்ன பலன்?

புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துகள் பனீரில் அதிகம். வளரும் குழந்தைகளுக்குத் தேவையான சத்துகள் பனீரில் கிடைப்பதுடன் பல் சிதைவு, ஈறு பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியதாகவும் பனீர் இருக்கிறது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 1 ஜுன் 2019