மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 மே 2019

துரைமுருகனுக்கு என்னாச்சு?

துரைமுருகனுக்கு என்னாச்சு?

திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த மே 23 ஆம் தேதி அதிகாலை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அன்றே சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அன்றைய தினம் மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து திமுக பெற்ற வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். அவ்வப்போது அறிவாலயம் வந்து செல்லும் துரைமுருகன் கடந்த வாரத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக சென்று வந்தபடியே இருக்கிறார்.

சிறுநீர் தொற்று ஏற்பட்டு அவதியுறும் துரைமுருகனுக்கு காய்ச்சலும் வந்துள்ளது. காய்ச்சலின் அளவு ஏறி இறங்கிக்கொண்டிருப்பதால் அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கென ஒரு அறை ஒதுக்கப்பட்டு, அங்கே சென்று செக்கப் செய்வதும் வீடு திரும்புவதுமாக இருக்கிறார் துரைமுருகன்.

திமுகவின் தேர்தல் வெற்றி துரைமுருகனுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் தனது மகன் வேட்பாளராக போட்டியிட்ட வேலூர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதில் இருந்தே கவலையோடுதான் இருந்தார் துரைமுருகன். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட துரைமுருகனுக்கு கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் பேசி தைரியம் கொடுத்தனர். ஆனபோதும் கவலைப்பட்டுக் கொண்டேதான் இருந்தார் துரைமுருகன்.

இந்த நிலையில்தான் சிறுநீர் தொற்று ஏற்பட்டு, அதோடு காய்ச்சலும் அதிகமாகி இப்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்கிறார்கள் துரைமுருகனுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரத்தினர்.

தகவல் அறிந்து கடந்த ஒரு வாரமாக வேலூரில் இருந்து திமுக நிர்வாகிகளும், தொழிலதிபர்களும் துரைமுருகனின் உடல் நிலை பற்றி அவரது மகன் கதிர் ஆனந்திடம் விசாரித்து வருகின்றனர்.

“ஒண்ணுமில்லை... யூரின் இன்ப்ஃபெக்‌ஷனோட காய்ச்சலும் வந்துடுச்சு. அதனால கொஞ்சம் டல்லா இருக்காங்க. மத்தபடி நல்லா இருக்காங்க” என்று கதிர் ஆனந்த் அவர்களிடம் சொல்லியனுப்பி வருகிறார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

இந்தியன் 2: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைகா?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

பதவி விலகல்: ராகுலிடம் சமாதானம் பேசும் பிரியங்கா

.

மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன?

.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

புதன் 29 மே 2019