மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

மம்தாவே பேசாதபோது ஸ்டாலின் பேசியிருப்பாரா? கே.எஸ்.அழகிரி

மம்தாவே பேசாதபோது ஸ்டாலின் பேசியிருப்பாரா? கே.எஸ்.அழகிரி

மம்தா பானர்ஜியே மோடியுடன் பேச விரும்பாதபோது ஸ்டாலின் எவ்வாறு பேசப்போகிறார் என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசிவருவது உண்மைதான் என்று பேட்டியளித்திருந்தார். மேலும், ஒருபக்கம் ராகுலுடனும், இன்னொரு பக்கம் சந்திரசேகர ராவுடன் பேசும் ஸ்டாலின், மற்றொரு புறம் மோடியுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “கூட்டணி தொடர்பாகப் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஆனாலும் பாஜகவுடன் ஸ்டாலின் பேசிவருவது உண்மைதான் என்று தமிழிசை உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தமிழிசை சவுந்தரராஜன் இரண்டு நாட்களாக மிகவும் சோர்வுடன் காணப்படுகிறார். தமிழகத்தில் இந்தத் தேர்தலில் அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் எங்களை மிகவும் கடுமையாகச் சாடுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாகத் தெரிவித்துள்ளார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “மம்தா பானர்ஜியிடம் பிரதமர் மோடி இரண்டு முறை பேசுவதற்கு முயற்சி செய்தார். ஆனால், இரண்டு முறையுமே மம்தா மோடியுடன் பேச விரும்பவில்லை. அதற்கு அவர் சொன்ன விளக்கம், 23ஆம் தேதிக்குப் பிறகு புதிய பிரதமர் வருகிறார். அவருடன் பேசிக்கொள்கிறேன் என்பதுதான். மம்தா பானர்ஜியே மோடியுடன் பேச விரும்பாதபோது ஸ்டாலின் எப்படி மோடியுடன் பேசப் போகிறார். இப்படியெல்லாம் மோடிக்குப் பெருமை சேர்க்க தமிழிசை முயற்சி செய்ய வேண்டாம்” என்று விமர்சித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019