மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

ஏசி மின்கசிவைத் தவிர்க்க.. சில வழிகள்!

ஏசி மின்கசிவைத் தவிர்க்க.. சில வழிகள்!

கோடை வெயிலைச் சமாளிக்க ஏசியை நாடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிறு வீடுகளில் வசிப்போர் கூட, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஏசியை வாங்கும் வழக்கம் பெருகியுள்ளது. இந்த சூழலில், ஏசியை பயன்படுத்தும்போது பாதிப்புகள் வராமல் இருக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம்.

இன்று (மே 15) அதிகாலையில் விழுப்புரம் மாவட்டம் காவேரிபாக்கத்தைச் சேர்ந்த ராஜ் உட்பட 3 பேர் மின்கசிவினால் ஏசி வெடித்ததில் பலியாகினர். கடந்த அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேடு அருகே நடந்த ஏசியில் கேஸ் கசிவு ஏற்பட்டதில் கணவன், மனைவி மற்றும் சிறு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்குவதனால் உயிரிழப்பு நேரிடுவது குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஏசியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி ஏசி பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் சிலர் நம்மிடம் பேசினர். வீட்டில் ஏசி பழுதான பின்னர் சரி செய்வதைவிட, சில மாதங்களுக்கு ஒருமுறை அவற்றைப் பரிசோதிப்பது நல்லது என்று தெரிவித்தனர். ஸ்பிளிட் ஏசியில் உள்ள ஃபில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கழற்றிச் சுத்தம் செய்ய வேண்டுமென்றும், வீட்டில் உள்ள ஏசியை 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்ய வேண்டுமென்றும் கூறினர்.

“ஏசி வாங்கும்போது தரமான ப்யூஸ் வயர், டிரிப்பர் போன்றவற்றைப் பொருத்துவது அவசியம். 1.5 டன், 2 டன், 3 டன் என்று வெவ்வேறு விகிதத்தில் ஏசி எந்திரங்கள் உள்ளன. உதாரணமாக, 1.5 டன் ஏசி எந்திரத்துக்கு 20 ஆம்ப்ஸ் வயரில் ஆன ப்யூஸ் பொருத்தினால், 20 ஆம்ப்ஸ் கொண்ட டிரிப்பர் பொருத்த வேண்டும். அப்போதுதான், மின் சப்ளையில் கோளாறு ஏற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகும். முக்கியமாக, ஏசியை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் ஏசி கம்ப்ரஸர், காயில், ஏசி வயர் எல்லாமே சூடாகும். இதனால் தீப்பிடிக்க வாய்ப்புண்டு” என்று தெரிவித்தனர்.

பொதுவாக ஏசி மின்கசிவால் தீப்பற்றுவதற்கு வயரில் ஏற்படும் குறைபாடுகளே காரணமாக இருக்கின்றன. இதனைத் தவிர்க்க, அதிகமான ஏசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். முடிந்தவரை ஏசிக்கான மின்சார சர்க்கியூட்டை தனியாக அமைக்க வேண்டும். இரவு முழுவதும் ஏசியை இயக்காமல் ஆட்டோமேடிக் முறையைப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்யாவிடில் சில மணி நேரம் ஏசியை ஆன் செய்துவிட்டு பின்னர் ஆஃப் செய்யலாம்.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019