மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

ரசிகர்களுக்கு ஒன்பிளஸின் விருந்து!

ரசிகர்களுக்கு ஒன்பிளஸின் விருந்து!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏனெனில், இதற்கு முன்பு வெளியாகிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனும் தற்போது ரூ.32,999க்கு விற்பனையாகிறது. புதிதாக வெளியாகியுள்ள ஒன்பிளஸ் 7 மொபைலின் ஆரம்பவிலையும் ரூ.32,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடும் நபர்களுக்கு ஒன்பிளஸ் 7 ஒரு அட்டகாசமான வாய்ப்பாக வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 7 மொபைலை விட கூடுதல் அம்சங்களுடன் ஃப்ளாக்‌ஷிப் மொபைலான ஒன்பிளஸ் 7 ப்ரோவும் வெளியாகியுள்ளது. இந்த மொபைலுக்கு ரூ.48,999 ஆரம்பவிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 மொபைலின் விலை குறைவாக இருப்பது நல்லொரு வாய்ப்பாக இருந்தாலும், ஒன்பிளஸ் 7 ப்ரோ மீதே ரசிகர்களும், ஒன்பிளஸ் நிறுவனமும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கூடுதலாக ரூ.16,000 தொகையை செலுத்தி ஒன்பிளஸ் 7 ப்ரோவை வாங்குவதனால் என்னென்ன கூடுதல் அம்சங்கள் கிடைக்கும்?

ஒன்பிளஸ் 7 ப்ரோவில் 6.67 அங்குல ஆமோலெட் தொடுதிரை உள்ளது. ஒன்பிளஸ் 7இல் 6.4 அங்குல தொடுதிரை உள்ளது. ஒன்பிளஸ் 7 ப்ரோவில் பாப் அப் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களை கவரும் அம்சமாக உள்ளது. இரண்டு மொபைல்களிலுமே ஸ்னாப்ட்ராகன் 855 சிப்செட் மற்றும் 6GB RAM ரகம் உள்ளது. ஒன்பிளஸ் 7 ப்ரோவில் 48 மெகாபிக்சல் கேமரா, 16 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டு போன்களிலுமே ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது. ஒன்பிளஸ் 7 குறைந்த விலையில் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தாலும், ரூ.16,000 கூடுதல் செலவுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ மோபைல் கூடுதல் வேகத்துடனும், மேம்பட்ட அம்சங்களுடனும் சந்தைக்கு வருகிறது. ஃப்ளாக்‌ஷிப் மொபைல்களில் கவனம் செலுத்தினாலும் பட்ஜெட் பிரிவை கைவசம் வைத்துக்கொள்ளும் நோக்கில் ஒன்பிளஸ் 7 மொபைலும் உடன் வருகிறது.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019