மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

பொருளாதார வளர்ச்சிக்கான பெருந்தடைகள்- அன்றும், இன்றும்!

சுதந்திரம் பெற்று இந்தியா தனக்கெனவொரு பாதையை உருவாக்கி, வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைய செயல்திட்டங்களை வடிவமைக்கத் தொடங்கியபோது, அதன்முன் மூன்று பிரதானத் தடைகள் இருந்தன.

முதலாவதாக, பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு, தேச மொத்த உற்பத்தியில் ஒரு கணிசமான பங்கு சேமிக்கப்பட்டு, உற்பத்திக்காக முதலீடு செய்யப்பட வேண்டும். இந்தியா அன்றிருந்த நிலையில், நுகர்வைக் குறைத்துதான் சேமிக்க வேண்டும் எனும் நிலை இருந்தது. வறுமை ஒழிய வேண்டும் எனும் நீண்டகாலப் பார்வையோடு இந்தப் பிரச்சனையை அணுகினால், சேமிப்பால் மட்டுமே பொருளாதார உற்பத்தியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, நுகர்வை அதிகரிக்க முடியும் எனும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரண்டாவதாக, போதிய அந்நியச்செலாவணி இல்லாததால், இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்குவது பெருஞ்சவாலாக அமைந்தது. உள்நாட்டில் போதிய சேமிப்பு செய்வதில் இருந்த சிக்கல் ஒருபுறம்; அதன் விளைவாக உற்பத்தி-உபகரணங்களின் உற்பத்திக்கு தேவையான முதலீடுகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், மறுபுறம் அந்நியச்செலாவணி சம்பாதிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அதிலும் இந்தியாவால் பெரிதளவிற்கு வெற்றிபெற முடியவில்லை.

மூன்றாவதாக, நகர்ப்புறங்களை மையப்படுத்திய தொழில்துறை வளர்ச்சி எனும் வியூகம், காலப்போக்கில் உணவுப் பொருட்களுக்கான தேவையை அதிகரித்தது. வேளாண்துறையின் உற்பத்தியைப் பெருக்க போதிய முதலீடுகளை அரசு செய்யாததால், தொழிற்துறையின் வளர்ச்சியோடு அத்துறையால் ஈடுகொடுக்க முடியாமல் போனது. இதனால் முதலில் உணவுப் பொருட்களுக்கான விலையை அதிகரித்து, பின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் விலைவாசி உயர்வு பரவத் தொடங்கியது.

அதன் பிறகு நடந்த பல நேர்மறை மாற்றங்களால், முதல் இரண்டு தடைகள் இன்று கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டன என்றே சொல்லலாம். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, அந்த வளர்ச்சியின் பலன்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப் படுகின்றன என்பதைத் தீர்மானிப்பதில் இன்றும் உணவுப் பொருட்களின் விலை பெரும்பங்கு வகிக்கிறது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 8 விழுக்காடு வளர்ந்து கொண்டிருந்தபோது, வேளாண் நெருக்கடி என்பது பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

இன்று தொழிற்துறை உற்பத்தி மந்தமானதும், அதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, வேளாண் நெருக்கடியும் அதற்கு முக்கியக் காரணம் என்பது புரியத் தொடங்கியுள்ளது. ‘உபரியான உணவு உற்பத்தியால் தொடர்ந்து சரிந்துவரும் உணவுப்பொருட்களின் சந்தைவிலை, தொழிற்துறை வளர்ச்சிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது, ஊரகத்தில் கிராக்கியைக் குறைத்து அதன் வளர்ச்சியை பாதிக்குமா?’ எனும் கேள்விக்கு விடை கிடைத்தால்தான் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும்.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 15 மே 2019